தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது.மார்ச் 31–ந்தேதி வரை நடக்கும்இந்த
தேர்வை 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதிவருகின்றனர்.
தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில பாடப்பிரிவுக்கானதேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.நாளை மறுநாள் (புதன்கிழமை)கணித தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு எதுவும்நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கைஎடுத்துள்ளது.
தேர்வு ஒரு பிறம் நடைபெற்று வந்தாலும் கூட விடைத்தாள் திருத்தும்பணியும் தொடங்கி விட்டன.தமிழகம் முழுவதும் 63 கல்விமாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்றுதொடங்கியது.தமிழ் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. முதன்மைதேர்வாளர் தலைமையில் கொண்ட குழுக்கள் இந்த பணியைமேற்கொண்டு வருகின்றனர். சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தபணியில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் காப்பு மையத்தில் இருந்துகல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன்வெளியே எடுக்கப்பட்டன.விடைத்தாள்கள் திருத்தும் பணியில்கவனமாகவும், தவறுகளுக்கு இடம் அளிக்காத வகையில்ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் 4மையங்களில் விடைத்தாள் திருத்தும்பணி நடைபெற்று வருகின்றன.சென்னை வடக்கு கல்வி மாவட்ட விடைத்தாள்கள் அண்ணா நகர்ஜெசிமோசஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சென்னை தெற்குகல்வி மாவட்ட விடைத்தாள்கள் அசோக் நகர் கே.கே. நிர்மலாபெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் திருத்தம் செய்யும்பணிநடக்கிறது.சி.எஸ்.ஐ. செயிண்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில்சென்னை மத்திய கல்வி மாவட்டவிடைத்தாள்களும், முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை கிழக்குகல்வி மாவட்ட விடைத்தாள்களும் திருத்தப்படுகின்றன.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12–ந்தேதி வரைநடக்கிறது. அதனை தொடர்ந்து மதிப்பெண்கள் டேட்டா எண்ட்ரி மூலம்பதிவு செய்யும் பணி தொடங்குகிறது.மாணவர்கள் பெற்றமதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி 20 முதல் 25 நாட்கள் வரைநடைபெறும். இதையடுத்து தேர்வு முடிவுகள் தயார் நிலைக்குவருகிறது. மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்மற்றும் செயலர் அனுமதி பெற்று எந்த தேதியில் தேர்வு முடிவுவெளியிடுவது என்பது குறித்து இறுதி செய்யப்படும். அதன் பின்னர்தேதி அறிவிக்கப்படும்.கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்–2 தேர்வுமுடிவுகள் மே 10–ந்தேதிக்குள் வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் மே9–ந்தேதி தேர்வு முடிவு வெளியானது.
இந்த ஆண்டும் அதே போல வெளியாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர்கூறும் போது, மே முதல் வாரத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு தயாராகிவிடும். எந்த தேதியில் வெளியிடப்படும் என்பதை அரசு முடிவுசெய்யும். ஒரு சில ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே முதல்வாரத்திலேயே வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்இந்த வருடமும் தாமதம் இல்லாமல் பிழை மற்றும் குழப்பமின்றிதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.மேலும் இந்த வருடம்பிளஸ்–2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதிதாகவழங்கப்படுகிறது.
தேர்வு முடிவு வந்த 2 நாட்களில் இதனைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உயர் கல்வியில் சேர கால தாமதம் ஏற்படுவதைதடுப்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாட்டை அரசு தேர்வுத்துறைசெய்துள்ளது.
No comments:
Post a Comment