தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பு மூலம் ரூ.5,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வரும் நிதியாண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.21,116 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக புகார் கூறினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி ஆணையம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு வருவாய் ஆதாரத்திற்கு விற்பனை வரியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வருவாய் பற்றாக்குறை: 2015-16ல் வருவாய் பற்றாக்குறை ரூ.4,616 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை ரூ,31,829 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கடன்: 31-.3-.2016 அன்று பொதுக்கடன் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 19.23 சதவீதமாக இருக்கும் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் துளிகள்:
* மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த பன்னீர்செல்வம், நதிநீர் இணைப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.253 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
* மின்சார துறைக்கு வரும் நிதிஆண்டில் 13,586 கோடி நிதி உதவி அளிக்கப்படும்
* பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ,8,228 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சாலைகளை மேம்மபடுத்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.480 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* குக்கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.750 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 60,000 பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
* தேசிய வேலைஉறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி அறிவிப்பு
* சென்னை மாநகரத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடி நிதி
* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி
* தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் மார்க் சிட்டி திட்டத்தில் சேர்க்க நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி
* பின்தங்கிய மலைப்பகுதி மேம்பாட்டிற்கு ரூ.75 கோடி நிதி
* தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைக்கு ரூ.198.9 கோடி நிதி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்பிற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.46.77 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ.5,568.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.538.49 கோடி நிதி
* நீதிதுறைக்கு ரூ.809 கோடி நிதி ஒதுக்கீடு
பால் வளத்துறைக்கு ரூ.100.68 கோடி நிதி
* கைப்பேசிக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* 10 எச்.பி மோட்டார் பம்புக்கு வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* ஏலக்காய் மீதான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* எல்.இ.டி விளக்குகளுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ரூ.183 கோடி நிதி
* குடிமைப் பொருள் விநியோக திட்டத்திற்கு ரூ.5300 கோடி நிதி ஒதுக்கீடு
* பாலங்கள், ஏரிகள் பராமரிப்பு மற்றும் புதிய ஏரிகள் உருவாக்க ரூ.334.57 கோடி நிதி
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696 கோடி நிதி ஒதுக்கீடு
* சிறு,குறு நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த ரூ.365 கோடி நிதி
*மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ரூ.400 கோடி நிதி
*இலவச லேப்டாப் வழங்க ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு
*வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
*சிறப்புத் திட்ட அமலாக்கத் துறைக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு
*அரசு மற்றும் தனியார் முதலீட்டுடன் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1262 கோடி நிதி ஒதுக்கீடு
*கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு ரூ.1947 கோடி நிதி ஒதுக்கீடு
* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு
* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5442 கோடி நிதி ஒதுக்கீடு
* தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.82.9 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது
* கொசு வலைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத மதிப்பு கூட்டு வரி முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நடப்பாண்டு ரூ.615 கோடி நிதி
* முதலமைச்சர் மரு-த்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு
* பாதுகாப்பான குடிநீர்திட்டங்களுக்கு ரூ.1,803.30 கோடி நிதி
ச
* முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.668 கோடி நிதி
* குழந்தை நலப்பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி, மகளிர் சுகாதாரத்திற்கு ரூ.60 கோடி நிதி
* இளைய தலைமுறையின் புதிய தொழிலுக்கு மானியம் வழங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
* அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2090 கோடி நிதியும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்கு ரூ.816.19 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிக்காக ரூ.868.40 கோடி நிதி ஒதுக்கீடு
* மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு ரூ.364.62 கோடி நிதி
* ஆதி திராவிடர் நலத் துணை திட்டங்களுக்கு ரூ.11 ஆயிரத்து 274 கோடி வழங்கப்படும்
* இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி

No comments:
Post a Comment