Thursday, 26 March 2015

தமிழகம் முழுவதும் கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியானதால், மறுதேர்வு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கு அண்ணாநகரை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ரீனா என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு கணித தேர்வின் வினாதாள்கள் வாட்ஸ் அப் மூல வெளியானது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களே வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொண்டதையும் குறிப்பிட்டுள்ள அவர், இது மேல் படிப்பிற்கு செல்லும் போது தன்னை போன்ற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என கூறியுள்ளார்.

வினாத்தாளுடன், விடைகளும் வெளியாகியிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என மாணவி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சிவஞானம் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment