“வாருங்கள் வணக்கம். எங்களைக் காண வந்தமைக்கு மிக்க நன்றி!’’என அழகு தமிழில் வரவேற்றனர், அந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.
‘அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் பேசுவதில் என்ன அதிசயம்?’
இருக்கிறதே. இவர்கள், பீகார் மாநிலக் குழந்தைகள். இவர்களின்நாவில் தமிழைத் தவழவிட்டவர், நாமக்கல் மாவட்டம்,கொண்டிசெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின்தலைமை ஆசிரியர் சபூர் அகமது
.
‘‘நாமக்கல் என்றதும் கோழிப் பண்ணைகளும் லாரிக்கு பாடி கட்டும்தொழிற்சாலைகளும்தான், நினைவுக்கு வரும். இந்தப்பணிகளுக்குகாக வட மாநிலங்களில் இருந்து வேலை தேடிவருபவர்கள் அதிகம். அப்படி வரும் பீகார் மாநிலத்தைச்சேர்ந்தவர்கள், வேலை கிடைத்ததும் நிரந்தரமாக இங்கேயேதங்கிவிடுவார்கள். தங்கள் குழந்தைகளையும் கோழிப் பண்ணை,தொழிற்சாலை, கட்டட வேலை களில் சேர்த்துவிடுவார்கள்”என்கிறார் சபூர் அகமது.
2006-ம் ஆண்டு, கொண்டிசெட்டிப்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவந்தவர் சபூர் அகமது. இந்தக் குழந்தைகளின் கல்விக்கு, தன்னால்முடிந்த வரை உதவ வேண்டும் என முடிவுசெய்திருக்கிறார்.
‘இந்த கொண்டிசெட்டிப்பட்டியில்தான் அதிகமான பீகார் குடும்பங்கள்இருக்கின்றன. அவர்களின் வீடுகளுக்குச் சென்று, குழந்தைகளைப்பள்ளிக்கு அனுப்புமாறு சொன்னேன். ‘கல்விக்குத் தேவையானசெலவுகள் அனைத்தையும் அரசு மூலம் பார்த்துக்கொள்கிறேன்.நீங்கள் ஒரு ரூபாய்கூட செலவு செய்ய வேண்டாம்’ என்றேன். ‘எங்கள்பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்பினால்தான் குடும்பத்தை நடத்தமுடியும்’ என்றனர். நிறைய முயற்சிகளுக்குப் பிறகு, 2006-ல் ஐந்துகுழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்’’ என்றவர் முகத்தில்வெற்றிப் பெருமிதம்.
அதே உற்சாகத்தில், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகள்,லாரி தொழிற்சாலைகள், கட்டடப் பணி நடக்கும் இடங்களுக்குச்சென்று பேசி, அந்தக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துஇருக்கிறார். இன்று வரை அந்த சேவை தொடர்கிறது. தற்போது,இந்தப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்தகுழந்தைகள் படிக்கிறார்கள்.
‘‘ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது ஆறு பீகார் மாநிலக் குழந்தைகள்இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஆசிரியர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி கற்றுத்தருகிறார்கள். தமிழை உச்சரிக்கவும்எழுதவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். பேச்சு, கட்டுரை, கவிதைப்போட்டிகளுக்குத் தயார்செய்கிறோம்” என்று வியக்கவைக்கிறார் சபூர்அகமது.
ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளாக இருந்தால், நேரடியாக முதலாம்வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் மாநிலத்தில் படிப்பைப்பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கும் மாணவர்களுக்கு, ஆறுமாதங்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துவிட்டு, அவர்கள் விட்டவகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு அனுப்புகிறார்கள்.
‘‘பீகார் மாநிலக் குழந்தைகள் தமிழ் கற்பது, மகிழ்ச்சியும்பெருமையுமான விஷயம்தான். என்றாலும், ஒவ்வொருவருக்கும்அவர்களின் தாய்மொழி முக்கியம் என்பதால், வாரம் ஒரு நாள்இந்தியும் கற்றுக்கொடுக்கிறோம்.” என்கிற சபூர் அகமதுவின் குரலில்அக்கறை மிளிர்கிறது.
முதன்முதலாக பள்ளியில் சேரும் ஒரு மாணவருக்கு 500 ரூபாய்செலவில், படிப்புக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும்வாங்கிக்கொடுக்கிறார்கள். இதற்காக, சபூர் அகமது மற்றும் பிறஆசிரியர்கள், தங்களின் பணத்தை அளிக்கிறார்கள். தொண்டுஅமைப்புகளும், ரோட்டரி கிளப்புகளும் உதவி செய்கின்றன.
‘‘இந்த அமைப்புகளின் உதவியுடன் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 20லட்சம் ரூபாய் செலவில் பள்ளியின் உள்கட்டமைப்புகளைமாற்றினோம்” என்கிறார் ஓர் ஆசிரியர்.
நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் எனப்பள்ளியின் சூழ்நிலையே உற்சாகத்தை அளிக்கிறது. கராத்தே மற்றும்கிராமியக் கலைகளையும் கற்கிறார்கள் இந்தக் குழந்தைகள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் கவிதா குமாரி, ‘‘என்னுடைய அப்பா, அம்மா கோழிப் பண்ணையில் வேலைசெய்கிறார்கள். இந்தப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன்.என்னுடைய பெரிய அண்ணன் ஆகாஷ், இந்தப் பள்ளியில்தான்எட்டாம் வகுப்பு வரை படித்தான். பிறகு, நாமக்கல் அரசுப் பள்ளியில்10-ம் வகுப்பில் 475 மதிப்பெண் பெற்றான். இப்போ, 12-ம் வகுப்புபடித்துவருகிறான். இன்னொரு அண்ணன் சதீஷ்குமார், 9-ம் வகுப்புபடிக்கிறான். நானும் நன்றாகப் படித்து டாக்டராக விரும்புகிறேன்’’என்கிறார் உற்சாகமாக.
திருக்குறள் மீது கவிதா குமாரிக்கு மிகவும் நேசம். மாவட்ட அளவில்,இரண்டு முறை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதல் இடம்பிடித்திருக்கிறார்.
5-ம் வகுப்பு படிக்கும் ஓம் குமார், 3-ம் வகுப்பிலிருந்து இங்கேபடிக்கிறார். ‘‘என் அக்கா அஞ்சலிகுமாரியும் தங்கை ஆர்த்தி குமாரியும்இங்கேதான் படிக்கிறாங்க. முதல்ல, பள்ளிக்கூடம் வரவே பயமாஇருந்துச்சு. இங்கே இருக்கிறவங்க நிறையப் பேர் வேற மொழிபேசுறவங்க. நம்மளை எப்படி நடத்துவாங்களோனு தயக்கமாஇருந்துச்சு. ஆனா, எல்லோரும் அன்போடு பழகி நண்பர்கள்ஆகிட்டாங்க. ‘உங்களுக்கு என்ன பிரச்னையா இருந்தாலும் என்கிட்டேசொல்லுங்க’னு ஹெட் மாஸ்டர் சொல்லியிருக்கிறார். நான் படித்துஐ.பி.எஸ் அதிகாரி ஆவேன்’’ என்கிறார் நம்பிக்கைக் குரலில்.
‘‘இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இங்கேபடிப்பு முடிந்ததும் நம்ம வேலை முடிந்தது என இல்லாமல், நாமக்கல்அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பேன். இவர்கள் வாழ்க்கையில்முன்னேறி, பெரிய நிலைமைக்கு வரவேண்டும் என்பதுதான்என்னுடைய ஆசை’’ என்கிற சபூர் அகமது குரலில் பூரிப்பு.
No comments:
Post a Comment