சொந்த வீடு வாங்குபவர்களில்பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவேஅதைவாங்குகிறார்கள். வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும்போது பலவிஷயங்களில்எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீட்டுக்கடன் வாங்கும்போதுகவனிக்க வேண்டியமுக்கிய அம்சங்கள்என்னென்ன?
முன்பணம்
தனி வீடாக இருந்தாலும்சரி, அடுக்குமாடிவீடாக இருந்தாலும்சரி, எதைவாங்கினாலும் நாம்மொத்தமாக எதிர்பார்க்கும் கடனைமுழுமையாக வங்கிகள்தந்துவிடாது. வீட்டின் மொத்தமதிப்பில் 20 சதவீதத்தொகையை வீடுவாங்குபவர் தன் கையில் இருந்துதான்கொடுக்கவேண்டும். இதைத்தான்மார்ஜின் தொகைஎன்று சொல்லுவார்கள். எஞ்சிய 80சதவீதத்தொகையைத்தான் வங்கிகள் கொடுக்கும்.
வீடு வாங்க உத்தேசிக்கும்பலரிடமும் முன்பணம் பெரிதாகஇருக்காது. சிலர் வீட்டில் உள்ளநகைகளைஅடகு வைத்தோஅல்லது விற்றோ20 சதவீதத் தொகையைத் திரட்டுவார்கள்.இன்னும் சிலர்மார்ஜின் தொகையைக்கொடுப்பதற்காகத் தனி நபர் கடனைக்கூடவாங்குவதுண்டு. இதனால், வீட்டுக்கடனுக்கான தவணை(இ.எம்.ஐ.), தனிநபர்கடனுக்கானதவணை எனவாங்கும் சம்பளத்தில்இருந்து பெரும்தொகைவங்கிக்குச்சென்றுவிடும். எனவே குடும்பச் செலவுக்குப் பணமில்லாமல்திண்டாடும்நிலைகூட வந்துவிடலாம்.
பெரும்பாலும் வாங்கும் சம்பளத்தில்45 சதவீதத் தொகையை வீட்டுச் செலவுக்குஎடுத்துச்செல்லும் வகையிலேயேவங்கிகள் வீட்டுக்கடனுக்கான தவணையைப்பெறும்என்றுசொல்லப்படுவதுண்டு. எனவே 45 சதவீதத்தொகையாவது நம்கையில் நிற்கும்அளவுக்குஇ.எம்.ஐ. வசூலிக்கப்படுமா என்பதைவீட்டுக் கடன்பெறும் முன்பேவிசாரித்துக்கொள்வதுமிகவும் நல்லது. இப்படிப் பிரச்சினைஏற்படுவதைத் தவிர்க்க, மார்ஜின் தொகையைமுழுமையாகஏற்பாடு செய்துகொண்டுபுதிய வீடுவாங்குவது பற்றியோசிப்பது நல்லது.
வங்கித் தேர்வு
பொதுத்துறை வங்கிகள், தனியார்வீட்டு வசதிநிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதிநிறுவனங்கள், பழைய தலைமுறைதனியார் வங்கிகள், புதிய தலைமுறைதனியார்வங்கிகள்எனப் பலவங்கிகள் இன்றுபோட்டி போட்டுக்கொண்டுவீட்டுக்கடன்களைவழங்குகின்றன.
பொதுவாக, தனியார் வங்கிகளைவிடப்பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன்வாங்குவதேநல்லது என்றுகருத்து உள்ளது. தனியார் வங்கிகளைவிடப்பொதுத்துறைவங்கிகளில் கடனுக்கான வட்டி குறைவாகஇருக்கலாம். பொதுத்துறை வங்கியில் கணக்குஇருந்தால், அங்கேயே வீட்டுக்கடன் கேட்கலாம்.
கடன் அனுமதி
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல்அளிப்பது வங்கியாஅல்லது வீட்டுவசதி நிறுவனத்தின்கிளையாஎன்பதைமுன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். சில வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்களின்மத்தியப்பரிசீலனை மையம்(சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) வங்கிக்கானஅனுமதியைவழங்கும். கிளைஅலுவலகங்களில் வீட்டுக் கடன் வழங்கினால்கடன்விரைவாகக் கிடைத்துவிடும். மத்தியப் பரிசீலனைமையம் என்றால், அங்கு வீட்டுக்கடன்கேட்டுஅதிக எண்ணிக்கையில்விண்ணப்பங்கள் வந்திருக்கும்.
எனவே வீட்டுக் கடன்கிடைக்கத் தாமதம்ஏற்படலாம். எனவே இதையும் முன்கூட்டியேதெரிந்துகொள்ளுங்கள். வசதி மற்றும்வட்டி விகிதத்தைக்கவனித்து வங்கியையோஅல்லதுவீட்டுவசதி நிறுவனங்களையோதேர்வு செய்யலாம்.
வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கியின் கடன்கொள்கையைப் பொறுத்து வட்டி விகிதங்கள் குறிப்பிட்டகாலத்துக்குள்மாறக்கூடும். ரெப்போ வட்டி விகிதம்குறைந்தால் பல வங்கிகள் கடனுக்கானவட்டியைக்குறைக்கக்கூடும். இதில் சில வங்கிகள் வெவ்வேறுநடைமுறைகளைப்பின்பற்றுவது உண்டு. வட்டி விகிதம்உயர்ந்தால், உடனே அதை வைத்து மாதத்தவணைஅல்லதுமாதத்தைச் சிலவங்கிகள் உயர்த்திவிடுவதுண்டு. அதே சமயம்வீட்டுவட்டிக்குறைந்தால் மாதத் தவணை அல்லது மாதங்களின்எண்ணிக்கையைக் குறைக்காமல்விட்டுவிடுவார்கள்.
வட்டியைக் குறைப்பதற்காக வங்கிக்குநேரடியாகச் சென்று கன்வென்ஷனல் ஃபார்மைப்பூர்த்திசெய்து, அதற்குரியகட்டணத்தைச் செலுத்திய பிறகே சில வங்கிகள்குறைக்கும்.
எனவே நீங்கள் வீட்டுக்கடன் வாங்கஉத்தேசித்துள்ள வங்கி, வட்டி குறையும் சமயத்தில்எப்படிநடந்துகொள்ளும்என்பதை முன்கூட்டியேதெரிந்து கொள்வதுநல்லது.
No comments:
Post a Comment