Tuesday, 31 March 2015

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

2015-2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள்
அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

2016-2017-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடபுத்தகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment