வடமதுரை அருகே எட்டிகுளத்துபட்டியில் அரசு தொடக்கப்பள்ளி துவக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.கொசவபட்டி ஊராட்சி எட்டிகுளத்துப்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படும்
இப்பள்ளியை, 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாகம் மாறியது. அப்போதிருந்தே ஆசிரியர்- நிர்வாகம் இடையே சுமூக நிலை இல்லை. பள்ளி கட்டடங்களின் காணப்படும் குறைபாட்டால், உறுதித்தன்மை குறித்த சான்றிதழை வருவாய்த்துறையினர் வழங்கவில்லை. இதனால் பள்ளியின் உரிமம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. நிர்வாக பிரச்னையால் படிப்போர் எண்ணிக்கையையும் வெகுவாக குறைந்து வருகிறது. பல பெற்றோர் தங்களது பச்சிளம் குழந்தைகளை பஸ்கள் மூலம் வேறு ஊர்களில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
பெற்றோர் தரப்பில் கூறுகையில், "உரிமம் புதுப்பிக்கப்படாததால் படிக்கும் குழந்தைகளின் சான்றிதழ் செல்லுமா என்ற அச்சம் எங்களிடம் உள்ளது. மேலும் இங்கு குடிநீர் வசதி இல்லை, சத்துணவு சமையல்அறை பழுதடைந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இருவர் பணியாற்றிய பள்ளியில் தற்போது ஒரு ஆசிரியை மட்டுமே உள்ளார். இதனால் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது. எட்டிகுளத்துப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி துவக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
பள்ளி மேலாளர் சக்திவேல் கூறுகையில்,"இங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிக்கு சென்றுவிட்டார். அந்த ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக அடிப்படையில் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். உரிமம் புதுப்பிக்க தேவையான பணிகளை செய்து வருகிறேன்' என்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் வீரய்யா கூறுகையில், "பள்ளி உரிமம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளியின் படிக்கும் மாணவரது சான்றிதழ் செல்லுபடியாகும்' என்றார்

No comments:
Post a Comment