Sunday, 22 March 2015

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பை ஆட்சியர் வா.சம்பத் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் மற்றும் பணி குறித்து தலைமை தேர்தல் அலுவலர் சந்தீப் சக்சேனா காணொளி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியில் ஆதார் எண், வாக்காளர் கைப்பேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவு செய்தல் தொடர்பாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரித்தல் பணி மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

மேலும் இப் பணி குறித்த சிறப்பு முகாம்கள் ஏப்ரல் 12-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதிவரையும், மே 10-ம் தேதி முதல் மற்றும் மே 24-ம் தேதி வரையும் ஞாயிறு விடுமுறை நாள்களிலும் நடைபெற உள்ளது. அப்போது ஆதார் அட்டை பெற்றவர்கள் மற்றும் ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்பட்ட ஆதார் சிலிப் எண் இச் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளலாம்.1950 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றார். வருவாய் கோட்டாட்சியர் அ.அனுசுயாதேவி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கும் பயிற்சி அளித்தார்.
இப் பயிற்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், தேர்தல் வட்டாட்சியர் சையத் மொஹமூத், அனைத்து கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment