பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் 1ம் தேதி முதல், இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மூலம், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி செல்லா
குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில், 2,809 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர், கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் நடைபெறும் இந்த பணியில், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மூலம் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில், அங்கன்வாடி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட தொழிலாளர் அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
புலம்பெயர்ந்த வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட குழந்தைகளை கண்டுபிடிக்கும் பணிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டட பணி அதிகம் நடைபெறும் பகுதியிலும், செங்கல் சூளைகளிலும் தீவிரமாக நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment