Wednesday, 25 March 2015

தமிழக பட்ஜெட்: செல்போன்களுக்கு வரி குறைப்பு- புதிய வரிகள் இல்லை

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.  செல்போன்களுக்கு தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாகக் குறைக்கப்பட்டுள்ளது.


நகர்ப்புற ஊராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்குரூ.133.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல், டெங்கு, தொற்று நோய் பரவாமல் அரசு கட்டுப்படுத்தியுள்ளது -தேசிய சுகாதார இயக்க மேம்பாட்டிற்காக ரூ.1347.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை செய்யப்பட்ட காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு உதவ ரூ.183 கோடி நிதியும் ஏழை கர்ப்பிணி பெண்களின் நிதி உதவி திட்டத்திற்கு ரூ.668.32 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.5,248 கோடி நிதி மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் -குழந்தைகள் இறப்பு விகிதம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்துள்ளது முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment