கடந்த கல்வியாண்டில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின்எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரிஆசிரியர்களின்எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்புகல்வியாண்டில், தமிழகத்தில்அரசு பள்ளிகளில், புதிய
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும்மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கடந்த கல்வியாண்டின்துவக்கத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்ற, 3,500 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்7,000 பட்டதாரி மற்றும்முதுகலை ஆசிரியர்கள்என, 10 ஆயிரத்து500 ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர்.
ஓய்வு:
கடந்த மே 31ம்தேதி, தமிழகம்முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ளனர்.இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வுநடத்தி, விரைவில்பணிநியமனம் வழங்கப்படும் என்றஎதிர்பார்ப்பு, ஆசிரியர்கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையேஇருந்து வருகிறது.இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்றவிகிதத்திலும், 6 முதல், 8ம்வகுப்பு வரை, 1:35
என்ற ஆசிரியர் - மாணவர்விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர்சேர்க்கைஅடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரிஆசிரியர்களின்எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிகஅளவில்உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால், அனைத்துதகுதியானஆசிரியர் பணியிடங்களையும்நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம்நீடிக்கும்நிலை உள்ளது.
நிர்பந்தம்:
இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லைஎன, கல்வித்துறைஅலுவலர்கள்தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறைஅலுவலர்கள் கூறியதாவது:கடந்த முறை ஆசிரியர்தகுதித்தேர்வுநடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்கவேண்டும் என்றநிர்பந்தம் இருந்தது.அதனால், உபரி ஆசிரியர்பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம்நடைபெற்றது.உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்குகணக்கெடுக்கும் போது, மாணவர்களின்எண்ணிக்கைக்கு, ஐந்துஆசிரியர் பணியிடங்கள்மட்டுமே போதுமானதாகஇருக்கும். ஆனால்,அங்கு, எட்டு ஆசிரியர்பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த உபரியாகஉள்ள, மூன்றுபணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின்,கடந்த கல்வியாண்டில்புதிய ஆசிரியர்நியமனம், வெகுசொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வுஎழுதி காத்திருப்போரைஏமாற்றம் செய்யக்கூடாதுஎன்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களைநீக்காமல், புதிய ஆசிரியர்களுக்குபணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டுஇறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ளநிலையில், தற்போதுபணிநிரவல்நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள்குறையும். அதேசமயம்,பலஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலைகூட உருவாகும். அப்போதும்,உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும்நீக்க முடியாது. இதனால், காலிஆசிரியர்பணியிடங்கள்இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில்ஆண்டுக்காண்டு, மாணவர்சேர்க்கை குறைந்து கொண்டேவருவதால், நடப்புகல்வியாண்டில், உபரி ஆசிரியர்பணியிடங்களின் எண்ணிக்கைகூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால்தான்,ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு,அவர்கள்கூறினர்.
No comments:
Post a Comment