இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:
2015-2016-ஆம் ஆண்டுக்கான இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு செவிலியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org/ www.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் ரூ.350-க்கான வரைவோலையினை ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் "செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை -10' என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் "செயலாளர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment