Tuesday, 21 July 2015

புதிய வருமான வரி படிவம் இன்று முதல் விநியோகம்

வரி தாக்குதல் செய்வதற்கான 14 பக்கங்கள் கொண்ட வருமான வரி தாக்கல் படிவம் தற்போது 3 பக்கங்களாக எளிதாக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துபவர்கள் படிவத்தை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஐ.டி.ஆர்.1, 2, 2ஏ, 4எஸ் என நான்கு படிவங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மாத சம்பளம் பெறுபவர்கள் 4 பக்கங்களை கொண்ட ஐ.டி.ஆர்-1 என்ற படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

மாத சம்பளம், வணிக வருமானம், ஒன்றுக்கு மேல் வீடு வைத்துள்ளவர்கள், வீட்டு மனை சொத்துக்கள் மற்றும் இதர வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு ஐ.டி.ஆர்-4எஸ், ஐ.டி.ஆர்-2ஏ என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படிவங்களை ஆன்லைன் மூலமாகவும், கைப்படவும் எழுதி விண்ணப்பிக்கலாம்.
மேலும், வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையை குறிப்பிட வேண்டும் என முன்பு கூறப்பட்டு இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய படிவத்தில் வங்கி சேமிப்பு கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ். குறியீட்டு எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் இருந்தாலோ, ‘ரீபண்ட்’ அதிகமாக இருந்தாலோ ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தார்.
2-ஏ படிவம் இன்று விநியோகிக்கப்படவில்லை. இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி பற்றிய தகவல்கள் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
Posted: 20 Jul 2015 06:30 PM PDT

No comments:

Post a Comment