Wednesday, 8 July 2015

முதியோர் ஓய்வூதியம் கிடைக்கலையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

சமூக பாதுகாப்பு ஓய்வூதியதிட்டத்தின் கீழ் முதியோர் மாற்றுத் திறனாளிகள்ஆதரவற்றவிதவைகள்ஆதரவற்ற வேளாண்தொழிலாளர்கள் ஆதரவற்ற விவசாயிகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைபெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகைவருவாய்த் துறைமூலம் வழங்கப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும்மாவட்ட கலெக்டர்அலுவலகங்களில் விண்ணப்பித்துஉதவித்தொகை கிடைக்காதவர்கள் திடீரெனஉதவித்தொகை நிறுத்தப்பட்டவர்கள்அதுகுறித்தசந்தேகங்கள் மற்றும் குறைகள் குறித்து புகார்தெரிவிக்க வசதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை எழிலகத்தில்உள்ள சமூகபாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் 1800 4251090 என்றகட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.சமூகபாதுகாப்பு திட்ட அதிகாரிஒருவர் கூறுகையில்'சென்னை உட்பட32 மாவட்டங்களில் பயனாளிகளை அலைய விடுவோர்மற்றும்தகுதியிருந்தும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதுபற்றி உடனடியாககட்டணமில்லாத தொலைபேசிஎண்ணை தொடர்புகொண்டு பேசலாம்அவர்களின்

புகார்கள் நிவர்த்தி செய்யப்படும்என்றார்.

1 comment: