Tuesday, 28 July 2015

பள்ளி வாகனங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண் டும்

புகார் தெரிவிக்க வசதியாக பள்ளி வாகனங்களில் கட்டண மில்லா தொலைபேசி எண்களை குறிப்பிட வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பள்ளி பஸ்கள் இயக்கப்பட வேண்டும். பஸ்களின் உறுதி தன்மையை பள்ளி நிர்வாகம் தினமும் உறுதி செய்ய வேண்டும். வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் ஆய்வுக்கு பள்ளி பஸ்களை ஆண்டுக்கு ஒரு முறை உட்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டகக் கூடாது. மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை பஸ்களின் உட்புறம், வெளிபுறம் தெளிவாக குறிப்பிட்டிருக்க
வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களை ஏற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் கூடுதலான மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வழித்தடங்களை அந்தந்த பள்ளி பஸ்களில் குறிப்பிட வேண்டும். தொலைபேசி எண்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். அவசர கால கதவுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஏறும், இறங்கும் வழிகளில் கதவுகள் பொருத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். இருக்கைகள் விதிகளுக்குட் பட்டு பராமரிக்கப்பட வேண்டும். படிக்கட்டுகள் மாணவர்கள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். உயரமான இருக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை பஸ்களில் குறிப்பிட வேண்டும். பராமரிக்கப்பட்ட முதலுதவி பெட்டிகள் உரிய குறியீட்டுடன் இருக்க வேண்டும். துறை அலுவலர்களை கொண்டு ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் பொருட்கள் வைக்க இடவசதி முறையாக அமைக்கப்பட வேண்டும். விதிகளுக்கு புறம்பான வேகத்தில் இயக்கக் கூடாது. விதிமுறைகளை மீறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment