வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்த பிறகு, அதன் சரிபார்த்தல் படிவ நகலை கையெழுத்திட்டு, வருமான வரித்துறைக்கு அனுப்புவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 2015–2016–ம் மதிப்பீட்டு ஆண்டில் இருந்து, அந்த நடைமுறை கைவிடப்படுவதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்கா நேற்று கூறினார்.
அதன்படி, மொத்த வருமானம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் இருந்து, ‘ரீபண்ட்’ தொகை கோராத, சிறிய அளவிலான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, அவர்கள் ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்தவுடன், அந்த இணையதளத்திலேயே ‘எலெக்ட்ரானிக் சரிபார்த்தல் கோட்’ வெளிவரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் சரிபார்த்தல் படிவ நகலை வருமான வரித்துறைக்கு அனுப்ப தேவையில்லை.

No comments:
Post a Comment