பத்து வருடங்களாக இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றியவர் அரவிந்த்(36). சுற்றுலாப் பயணிகளுடன் பேசுவதற்காக முதலில் இத்தாலி மொழியை கற்றுக்கொண்டார்.
பின்னர் ஸ்பெயின், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் போர்த்துகீஸ் என்று அடுத்தடுத்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.இந்த ஐரோப்பிய மொழிகள் அவருக்கு நினைவுத்திறனை மேம்படுத்தும் பல புதிய உத்திகளை சொல்லிக்கொடுக்க, இவர் தன் நினைவுத்திறனை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கோவையில் அயல் மொழி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.தன் தாய்நாட்டிற்கு திரும்பிய அரவிந்தின் மனதில், தன்னுடைய நினைவுத்திறனை வைத்து ஏதாவது சாதிக்க முடியுமா? என்ற எண்ணம்தான் இருந்தது. இதுவரை உலகில் நினைவுத்திறனை வைத்து சாதித்தவர்கள் பற்றி ஆராய்ந்தார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் 264 இலக்கம் கொண்ட பைனரி தொடர் நினைவுபடுத்தி சொன்னதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் உச்சகட்ட சாதனையாக இருந்தது.உடனடியாக களத்தில் இறங்கிய அரவிந்த் தன்னுடைய நினைவுத்திறனால் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி, அதை எடிட் செய்யாமல் வீடியோவாக எடுத்து கின்னசுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இவரது அபார சாதனையை அங்கீகரித்து கடந்த வாரம் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழை அனுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment