Tuesday, 28 July 2015

ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற பெயரில், கட்டுரைப் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


பள்ளிகளில் மாணவர்கள் அளவில், ஆக., 14ல், போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்கள், மக்களிடம் ஒற்றுமையை உருவாக்குவது போன்ற தகவல்கள் அடிப்படையில், கட்டுரை எழுத, மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment