மத்திய அரசின் கட்டாயஇலவச கல்விஉரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல்8ம்வகுப்புவரையில் இடைநிலைஆசிரியர் மற்றும்பட்ட தாரிஆசிரியர் பணியில்சேர வேண்டுமானால்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.
அதன்படி இலவச மற்றும்கட்டாய கல்விசட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர்கல்விக்குழுமம்(என்.சி.டி.இ.)கொண்டுவந்தது.2009ல் அறிமுகப்படுத்தப்பட்டஇந்த சட்டம்,தமிழகத்தில், 2010-ல் அமல்படுத்தப்பட்டு, 2011-ல் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.
மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர்தகுதித்தேர்வுநடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில்2012-ல் ஜூலைமற்றும் அக்டோபரிலும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாகஅரசு பள்ளிகளில்14 ஆயிரத்துக்கும்மேற்பட்ட ஆசிரியர்கள்நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்தஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வுநடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும்5 மாதங்களே உள்ளன. எனவே, இந்தஆண்டுதகுதித் தேர்வுநடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட்பட்டதாரிகளும்ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார் கள்.
இது தொடர்பாக ஆசிரியர்தேர்வு வாரியத்தினரைதொடர்பு கொண்டுகேட்டபோது, “ஆசிரியர்தகுதித் தேர்வு தேர்ச்சியில்இட ஒதுக்கீட்டுபிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண்தளர்வுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தவழக்கு ஜூலை21-ம் தேதிவிசாரணைக்கு வந்தபோது ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தேர்வுஎப்போதுநடைபெறும்எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment