Wednesday, 8 July 2015

மாணவர்களுக்கு தேவை 'ஏழு'

நாட்டின் எதிர்காலம், மாணவர் கையில் தான் உள்ளது. அந்த பொறுப்புணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவப் பருவத்தில், நல்ல வழிகாட்டியைக் கொண்டிருப்பவர்கள் முன்னேறி விடுவர். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், அல்லது வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் மாணவர்கள் திசைமாறி நிற்கிறார்கள். நல்ல விஷயங்களை பார்த்தோ, படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டும்.


1. உங்களையும் நேரத்தையும் நிர்வகிக்க பழகிக் கொள்ளுங்கள்.
2. பிரச்னையை எதிர்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும்
பழக்கத்துக்கு தள்ளப்படுவீர்கள்.

3.நீங்கள் செய்யும் விஷயம் சரியானதுதான்,என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.
4. பிரச்னைகளை தீர்க்கும் வழிகளை ஆராயும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே மாறுதலுக்கு வழிவகுக்கும்.
5. தன்னம்பிக்கை, சுயகவுரவம் ஆகியவை முக்கியமானது என்று கருதுங்கள்.
6. எல்லா விஷயத்தையும் ஆழமாகவும், சரியாகவும் அணுகுங்கள். ஒரு வேலையை எடுத்தால் திறமையாக முடியுங்கள்.
7. ஓய்வு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment