அரசுப் பள்ளிகளில், கணினி வழி கல்வியைப் போதிக்கும், ஸ்மார்ட் கிளாஸ்அறை அமைக்கும் பணியை, தமிழ்நாடு மின்னணுவியல் கழகமான, எல்காட் நிறுவனம் துவங்கி உள்ளது. கற்பித்தல் முறை புதுப்பிப்பு மாணவர் புரிந்துகொள்ளும் வகையில் போதிக்கும் முறையை மேற்கொள்ள, ஸ்மார்ட் கிளாஸ் அறை திட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டம், ஏற்கனவே துவக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில், அறிமுகம் செய்யும் நடவடிக்கையை எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கற்பித்தல் இதுகுறித்து, எல்காட் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மல்டி மீடியா&'வின் உள்டக்கத்தை கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் கற்றல் சூழல் மாறும். எளிதான முறையில், உரிய பட விளக்கங்களோடு, கற்பித்தல் முறையை மேற்கொள்ள முடியும். மேல்நிலைப்பள்ளிபாடத் திட்டங்களுக்கு ஏற்ப, மல்டி மீடியா வன்பொருள் மற்றும்மென்பொருள்களை உருவாக்க வேண்டும். ஓராண்டுக்கு இந்த மென்பொருள் பயன்பாட்டில் இருக்கும். மூன்றாண்டுகளுக்கு வன்பொருள் பராமரிப்பு இருக்கும். உபகரணங்கள் பள்ளி பாடத் திட்டத்தை, அரசு மாற்றும்போது, அதற்கேற்ப மல்டி மீடியா உள்ளடக்கத்தையும் மாற்ற வேண்டும். பள்ளிகளில் இதற்கான உபகரணங்கள் அளிக்கப் படும்.
முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சியில் உள்ள, 16 மேல்நிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் அறை சோதனைமுறையில் அமைக்கப்படும். இவற்றின் செயல்பாட்டை கண்காணித்து, மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதை செய்து, பிற மேல்நிலைப் பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் அறை துவங்கப்படும். இதற்காக, ஒப்பந்தப் புள்ளி கோரப் பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் ஒப்பந்ததாரர், பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து, இத்திட்டத்தைச் செயல்படுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment