Tuesday, 3 March 2015

சென்னை பல்கலை.தொலைதூரக் கல்வி நாளை தேர்வு முடிவு

சென்னை

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைதூரக்கல்வி இளங்கலை பட்டப் படிப்புகளுக் கான தேர்வுகள் கடந்த டிசம்பரில் நடந்தன. இத்தேர்வு முடிவு புதன்கிழமை (நாளை) வெளி யிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தெரிந்துகொள்ளலாம். ஏ-12, ஏ-13, சி-12, சி-13, சி-14 ஆகிய வரிசைகளில் தொடங்கும் பதிவெண்கள் உடைய தற்போதைய பேட்ச் மாணவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மறுமதிப்பீடு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.750. மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப் பிக்கத் தகுதியில்லாதவர்கள் உரிய படிவத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. மறுமதிப்பீட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் மார்ச் 11-ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment