Monday, 6 April 2015

தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?-

தமிழக சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை இருக்கிறது. இதற்கிடையே சட்டசபை தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். இதனால் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சி அருகே நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

அ.தி.மு.க. மூத்த நிர்வாகியான தம்பித்துரையின் இந்த அறிவிப்பு காரணமாக தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம்.
தற்போது தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக அ.தி.மு.க. கருதுகிறது. இதனால் சட்ட சபையை கலைத்து விட்டு முன் கூட்டியே தேர்தலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தங்களுக்கு அனுதாப அலை இருப்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.
2011 சட்டமன்ற தேர்தலிலும், 2014 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலிலும் இந்த வெற்றி தொடர வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் விரும்புகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்போது கட்சி மிகுந்த உயர்ந்த நிலைக்கு செல்லும் என்று கருதுகின்றனர்.
தற்போதைய சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 151 ஆக இருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 28 இடமும், தி.மு.க. வுக்கு 23 இடமும், மற்றவர்களுக்கு 26 இடமும் உள்ளன.
முன் கூட்டியே தேர்தலை நடத்துவதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இயலும் என்று அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

No comments:

Post a Comment