அகில இந்திய கால்நடை மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏஐபிவிடி-2015) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க மே 14 ஆம் தேதி கடைசித் தேதியாகும்.
நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்து அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். என்ற கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் 15 சதவீத படிப்பு (300 இடங்கள்) இடங்களில் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் இந்தத் தேர்வை நடத்துகிறது.
2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவுத் தேர்வு, வருகிற ஜூன் 20-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு www.aipvt.vci.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மே 14 கடைசித் தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் www.vci.nic.in என்ற இணையதளத்திலிருந்து மே 29-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment