கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது:
செய்திபகிர்வு தே .தாமஸ் ஆண்டனி ,ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி நாதகவுண்டன் பாளையம்,மொடக்குறிச்சி ஒன்றியம் .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடுமாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வுசெய்துள்ளது .இவர்களது கற்பித்தல் முறைகளை இணையத்தில்பதிவேற்றம் செய்யவும் ,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் முடிவு செய்துள்ளது .அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவித்யாசபடுத்தவும் ,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் ,பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் செயல்பட்டு வருகிறது .
தனியார் பள்ளிகளை விட ,அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளைமேம்படுத்த, புதிய முயற்சி ஒன்றை ,மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது .அதன்படிகற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை,மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில்,வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது .இதற்காக மாநிலம்முழுவதும் 1526 ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறைகளை விளக்கி,மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர்.இதில் கற்பித்தலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு ,முதற்கட்டமாக ,75 ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளைவீடியோ எடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது .அவைஇணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .பதிவேற்றம் செய்யப்படும்வீடியோக்களை இணையதளத்தில் பார்த்து மற்ற ஆசிரியர்களும்பின்பற்ற வாய்ப்பு உள்ளது என மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்நம்புகிறது .
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொடக்குறிச்சி ஒன்றியத்தில்உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,நாதகவுண்டன் பாளையம்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி,பெருந்துறை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,வீரணாம்பாளையம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மயில்சாமி,பவானி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி,சின்னியம்பாளையம் ஆசிரியை சுதா மற்றும் பவானி ஒன்றியம்,ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இராமநாதபுரம் பள்ளி ஆசிரியைவாசுகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ,இவர்களது கற்பித்தல் முறைகள்குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை நேரில் பார்வையிட மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வி ஒளிபரப்புநிகழ்ச்சிக்கான இயக்குனர் ஜெரோம் தலைமையிலான குழுவினர்மேற்கண்ட பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர் .இயக்குனர் ஜெரோம்கூறுகையில் ,தமிழ்நாட்டில் தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்விமுதல் ஆசிரியர்கள் பலவிதமான கற்பித்தல் முறைகளில்ஈடுபடுகின்றனர் .இந்த ஆண்டு 75 ஆசிரியர்களை தேர்வு செய்துஅவர்களது கற்பித்தல் முறைகளில் கையாளும் புதுமைகளை ஒலி ,ஒளிகாட்சிகளாக படம் பிடித்து பிற ஆசிரியர்களுக்கும் இணையதளம் மூலம்கொண்டு செல்கிறோம் .தொடர்ந்து இதுபோன்ற புதுமை குறித்துமற்றவர்களுக்கு காண்பிக்க உள்ளோம் என்றார் .
இதுவரை தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 ஆசிரியர்களில் 58ஆசிரியர்களின் கற்பித்தல் முறையினை வீடியோவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ,இன்னும் ஓரிரு வாரத்தில் மீதமுள்ளஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பதிவு செய்து முடிக்கப்படும் எனகல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரோடுமாவட்ட ஆசிரியர்கள் .
1. தே .தாமஸ் ஆண்டனி ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நாதகவுண்டன் பாளையம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் .
[ பொம்மலாட்ட வழிக்கல்வி ]
2.ப .மயில்சாமி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வீரணாம் பாளையம்,பெருந்துறை ஒன்றியம் .
[ யோகாசன வழிக்கல்வி மூலமாக மாணவர்களின் தேர்வு வெற்றியை அதிகப்படுத்துதல் ]
3. ம .சுதா ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,சின்னியம் பாளையம்,பவானி ஒன்றியம் .
[ பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையைஅழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம்படுத்துதல் ]
4. அ .வாசுகி ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,இராமநாதபுரம் ,பவானிஒன்றியம் .
[ வாழ்க்கை கல்வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களைஉணரச் செய்தல் ]
No comments:
Post a Comment