இதில் 26 வகையான பொதுத்துறை வங்கிகள்தான் அதிக கல்விக் கடன் வழங்குகின்றன. அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம், வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. ரூ.4 லட்சம் வரையான கடனுக்கு பெற்றோர் உத்திரவாதம் தேவையில்லை. சிறப்பு பிரிவின் கீழ் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற்றால் 5 சதவீதம் முன்பணம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் 15 சதவீதம் பணம் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். மாணவிகளுக்கு அரை சதவீதம் வட்டி தள்ளுபடி உண்டு. பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கல்விக் கடன் பெறலாம், என்றார்.
No comments:
Post a Comment