Thursday, 16 April 2015

ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்

 தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 19-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 18-ஆம் தேதியும் தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு கால அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.


இரண்டாம் ஆண்டு தேர்வு அட்டவணை
மே 18 - திங்கள்கிழமை - இந்திய கல்வி முறை
மே 20 - புதன்கிழமை -- கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -2
மே 22- வெள்ளிக்கிழமை -- தமிழ் கற்பித்தல்-2, மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி-2
மே 26 - செவ்வாய்க்கிழமை -- ஆங்கிலம் கற்பித்தல் -2
மே 28 - வியாழக்கிழமை --- கணிதம் கற்பித்தல்-2
ஜூன் 1 - திங்கள்கிழமை - அறிவியல் கற்பித்தல்-2
ஜூன் 3 - புதன்கிழமை -- சமூக அறிவியல் கற்பித்தல் -2
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை
மே 19 --- செவ்வாய்க்கிழமை --- கற்கும் குழந்தை
மே 21 --- வியாழக்கிழமை --- கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்துதலும்-1
மே 25 -- திங்கள்கிழமை --- ஆங்கிலம் கற்பித்தல்-1
மே 27 -- புதன்கிழமை--- தமிழ் கற்பித்தல்-1, மலையாளம், தெலுங்கு, உருது கற்பித்தல், இளஞ்சிறார் கல்வி-1
மே 29 -- வெள்ளிக்கிழமை -- கணிதம் கற்பித்தல் -1
ஜூன் 2 -- செவ்வாய்க்கிழமை --- அறிவியல் கற்பித்தல்-1
ஜூன் 4 -- வியாழக்கிழமை--- சமூக அறிவியல் கற்பித்தல் -1
தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில்www.ednnet.inபதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 22-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment