Friday, 10 April 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 6
சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 107 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்கள் இனி அடிப்படை சம்பளத்தில் 113 சதவீதம் அகவிலைப்படி பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். 6-வது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment