நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால், எந்தவொரு செயலையும் முழு கவனத்துடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஈடுபபட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நாம் எடுத்த காரியத்தை சிறப்புடன் முடித்து வெற்றி வாகை சூடலாம்.
ஒருநிலைப்படுத்தப்பட்ட மூளையில் தான் எந்த ஒரு தகவலையும் ஒருங்கிணைத்து சேகரிக்க முடியும். மூளை எப்போதும் ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுத்துவதற்கான பயிற்சிகளை நாம் தினமும் மேற்கொள்ள வேண்டும். மூளை சரியாக இயங்கும் போது, நாம் செய்ய நினைத்த காரியத்தை சுலபமாக குறித்த நேரத்தில் செய்ய முடிகிறது.
மூளையானது குறிப்பிட்ட தகவல்களை ஆழமாகவும், வேகமாகவும், தொடர்புடைய தகவல்களை நினைவுகூர்ந்து நம்மை செயல்பட வைக்கிறது. மூளை பலத்துடன் இயங்குவதற்கு தொடர்ந்து நாம் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
தினமும் 2 லிட்டர் தண்ணீரை பருக வேண்டும். 6 முதல் 8 மணி நேர உறக்கம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். வைட்டமீன் சத்து அதிகமுள்ள தாணியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
மூளையின் பலத்தை அதிகரிக்க கூடுதல் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். எந்த ஒரு செயலில் ஈடுபடும் போதும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தம் கொடுக்காமல் அறிவு திறனை வளர்க்கும் செயலில் நம்மை ஈடுபடுத்த வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மூளைக்கு தொடர்புடையது. எனவே மனஅழுத்தத்துடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல், தெளிந்த சிந்தனையுடன் மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் நாம் அடைய விரும்பும் இலக்கை சுலபமாக கைபற்ற முடியும்.
No comments:
Post a Comment