சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜவகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஏழை மாணவர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் அல்லது சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பை படிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், கூலி வேலைசெய்யும் பெற்றோர்களின் மகன்கள் அல்லது மகள்கள், முதல் தலை முறை பட்டதாரிகளாக ஆக விரும்புபவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் (www.unom.ac.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment