Friday, 24 April 2015

கோடை விடுமுறை யில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை.-பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன்

கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல் அ. அருள்தாசன் திருநெல்வேலி கோடையில் வெயிலின் உக்கிரத் திலிருந்து தப்பிக்கவும், விடுமுறை யில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம்
உதவு கிறது. இந்த உளவியல் நலனுக்கா கவே ஆங்கிலேயர் காலத்தி லிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த விடுமுறையிலும் வகுப்புகளை நடத்தி தங்கள் பள்ளி மாணவர், மாணவியரை அதிக மதிப்பெண் பெறச்செய்து, பள்ளியின் பெருமையை உணர்த்துவதற் காக கடந்த சில ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கவுள்ள மாணவர், மாணவி யருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்து வது வழக்கமாகியிருக்கிறது. குறிப்பாக மெட்ரிக் பள்ளிகளில் தொடங்கிய இந்த நடைமுறை இப்போது அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் கோடையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை கல்வித் துறையே தடை செய்தது.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் அறிவிப்பு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனாலும் மெட்ரிக் பள்ளிகள் சில வற்றில் மாணவர், மாணவியரை சீருடையில் வரவழைக்காமல், வண்ண உடைகளில் வரவழைத்து வகுப்புகளை நடத்தியதும் வெளிச் சத்துக்கு வந்திருந்தது. கடந்த ஆண்டு இந்த பிரச்சினை பெரி தாக எழவில்லை. ஆனால் இவ்வாண்டு மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் சிலவற்றில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் டி.பாபுசெல்வன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருசில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் கள் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண் டும் என்று முதுகலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்து கிறார்கள். பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில் வெளியிடப்படாத நிலையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு உரிய பாடத்தை அனைத்து மாணவர் களுக்கும் நடத்த ஆசிரியர்களை கட்டாயப் படுத்துவது கண்டிக்கத் தக்கது. கோடையில் சிறப்பு வகுப்பு களை நடத்துவதை மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர். தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களிலும் இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளதாகவும் தெரிகிறது. கோடையில் வகுப்புகளை நடத்து வதற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் மன உளைச்சலை உருவாக்கும் கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகளுக்கு தடைவிதிக்க அரசு முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். கல்வி இயக்குநர் விளக்கம் இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது, "கோடை விடுமுறை யில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை. விடுமுறை நாட்களில் வகுப்பு கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது தொடர்பாக எனது கவனத்துக்கு ஏதும் வரவில்லை. பள்ளிகளுக்கு வகுப்புகள் 22-ம் தேதி முடிந்து கோடை விடுமுறை 23-ம் தேதி தான் ஆரம்பிக்கிறது. அப்படி இருக்கும்போது, விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்ற ஊடகங்களுக்கு எல்லாம் எப்படி பதில் அளிக்க முடியும்?" என்றார்.

No comments:

Post a Comment