உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டின் சிறந்த கல்வியாளரை கவுரவிக்கவும், கல்வி தொடர்பாக ஏற்பட்ட சிறப்பான மாற்றத்தை நினைவுகூறும் வகையிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தியாவில் கல்விப் பணிக்கு தம்மை அர்ப்பணித்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பெருமைப்படுத்துகின்றனர்.
உலகில் தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்க, ஒருவனை மாணவப்பருவத்தில் இருந்தே தயார்படுத்துவது ஆசிரியர்களே. மாணவர்களுக்கு படிப்பின் அவசியத்தையும், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்து திறன்களையும் ஒரு சேர கற்றுக் கொடுப்பது ஆசிரியர்கள்தான். ஒருவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்துவதும் ஆசிரிய பெருமக்களே. அவர்களின் பொறுப்புணர்ச்சியே சமுதாய மாற்றத்தை விதைக்கும்.
கலை, அறிவியல், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் முதல் மெஞ்ஞானம் வரை அனைத்து துறைகளிலும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றி வருகின்றனர். எனவேதான் பணியிலேயே சிறந்த பணி ஆசிரியப் பணியாக கருதப்படுகிறது.
ஒரு சிற்பி எவ்வாறு ஒழுங்கற்ற கருங்கல்லை உளியால் செதுக்கி அழகிய சிற்பமாக மிளிரச் செய்கிறாரோ, அதைப் போலவே ஒவ்வொரு ஆசிரியரும் போதனை என்னும் உளியால் மாணவர்களை பக்குவப்படுத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கையை அழகுபடுத்தி, உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். ஆசிரியர்களே, மாணவர்களுக்கு வாழ்வின் முன் உதாரணமாய், என்றென்றும் உந்துசக்தியாக திகழ்கின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்வித் தொண்டு:
'ஆசிரியப் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி' என்று கூறி, அதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அன்பான பேச்சாலும், சிறந்த அறிவாற்றலாலும், தூய்மையான நட்பாலும் பல்லாயிரக்கணக்கான சிறந்த மாணவர்களை உருவாக்கினார்.
ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த முதல் மாமனிதரும் இவரே. ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவ மேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். கல்விக்கு, ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்த்ததாலே இவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஆசிரியர்களை போற்றுவோம்:
இவரை போலவே அன்னை தெரசா, ரவீந்திரநாத் தாகூர், பாரதியார், திரு.வி.க. போன்றோர் ஆசிரியர் பணியின் மூலம் அரும்பெரும் தொண்டாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்ணைவிட்டு பிரிந்தாலும், ஏராளமானவர்களின் மனதில் அணையாமல் சுடர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தபோதும், ஆசிரிய பணியாற்றினார். ஆசிரியராக இருப்பதே பெருமைக்குரியதாக கருதுவதாகவும் பல மேடைகளில் கூறி உள்ளார்.
சிறந்த ஆசிரியராலும், சிறந்த புத்தகத்தாலும், இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு உன்னதமான புத்தகமே. எனவே நாம் அனைவரும் ஆசிரியர்கள் காட்டும் வழியில் பயணித்து வாழ்வில் பிரகாசிப்போம். நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்!

No comments:
Post a Comment