தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள தபால்காரர் (போஸ்ட்மென்) மெயில் கார்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.காலியாக உள்ள 142 தபால்காரர் பணியிடத்துக்கும், மெயில் கார்டு பணி ஒரு இடத்துக்கும் எழுத்து தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த இரண்டு பணிகளுக்கும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் பொதுப்
பிரிவினருக்கு 18 வயது முதல் 27 வரையும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். வயது வரம்பு 04.10.2015 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.ஆன்–லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணம் ரூ. 100 தேர்வு கட்டணமாக ரூ. 400 செலுத்த வேண்டும். பெண் மற்றும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், உடல் ஊனமுற்றோருக்கு தேர்வு கட்டணத்தில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது.www.dopchennai.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 4–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணியில் சேர்ந்த 3½ ஆண்டு பணி நிறைவுக்கு பின் அஞ்சலக – பிரிப்பக எழுத்தர், பதவி உயர்வுக்கான இலாகா தேர்வுக்கு தகுதி உடையவர் ஆவார்.இந்த பணிக்கு தேர்வானவர்கள் ரூ. 5200 – 20200 சம்பள தொகுதி, தகுதி நிலை – 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தபால் காரர், மெயில் கார்டு பணிக்கு விண்ணப்பித்து அரசு ஊழியர் ஆவது மட்டுமின்றி மக்கள் சேவை செய்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment