Monday, 14 September 2015

மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்: மோடி அரசு பரிசீலனை

தமிழகத்தில் முதல்– அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோது ஏழை குழந்தைகள் பள்ளிக்கு படிக்க வராதது சாப்பாட்டுக்கு வழிஇல்லாமைதான் என்பதை கண்டறிந்தார்.அதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் ஒரு முன்மாதிரி திட்டமாக போற்றப்பட்ட இந்த திட்டத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.தற்போது தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற
பெயரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்தியா முழுவதும் மத்திய அரசும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்தி நடத்தி வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவ– மாணவிகள் பலன் அடைந்து வருகிறார்கள்.கல்விக்கண் திறந்தவர் என்று போற்றப்படும் காமராஜரால் பள்ளிக் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று காமராஜர் பெயர் சூட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.நாட்டுக்கு உழைத்த தலைவர்களை கவுரப்படுத்தி வரும் மோடி அரசு தென்னாட்டில் பிறந்து நாடு போற்றும் பெருந்தலைவராக உயர்ந்த காமராஜர் பெயரை சூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளேன். தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

No comments:

Post a Comment