Saturday, 26 September 2015

“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு

பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI கருத்துகேட்டிருந்தது.

           பேசும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதற்கு தொலைபேசி நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என பொதுமக்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து TRAIக்கு தொலைபேசி நிறுவனங்களின் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.பேசும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்பட்டால், அந்த அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற யோசனையையும் நிராகரிப்பதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு கருத்துக்களையும் பரிசீலித்து இதுதொடர்பான உத்தரவைTRAI வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.​

No comments:

Post a Comment