Wednesday, 30 September 2015

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மூன்று, மேல்நிலைப்பள்ளிகள், 18 என, மொத்தம், 21 பள்ளிகள் உள்ளன. கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில், கூடுதலாக இருந்த, 14 ஆசிரியர்கள், பற்றாக்குறையான பணியிடங்களுக்கு, இடமாறுதல் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment