சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்) அறிவித்துள்ளது.
சமுதாயத்தில் வறுமைக்கோட் டுக்குக் கீழே வசிக்கும் பெற்றோர் களின் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் எல்ஐசி கோல்டன் ஜூப்ளி ஸ்காலர் ஷிப் என்ற கல்வி உதவித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இளங் கலை பட்டப் படிப்புகள், மருத்து வம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகள், பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மற்றும் ஐடிஐ படிப்புகளில் சேர இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப் பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டொன் றுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இந்த உதவி தொகை கிடைக்கும். உதவித் தொகை யைப் பெற ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் செப்.23-ம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு http://www.licindia.in/GJF_ scholarship.htm என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment