இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தள பயன்பாட்டில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலி (WHATS APP) ஆகும். மற்ற செயலிகளை விட வாட்ஸ் அப் மூலம் மொபைல் வாயிலாக இ-மெயில் தகவல்கள்,
பேட்டோ, வீடியோ ஆகியவை நொடிப்பொழுதில் அனுப்பி வைகப்பட்டு அவை வைரலாக பரவிவிடுகிறது. இது போன்ற டேட்டாக்கள் பல்வேறு குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும் பயன்படுகிறது.
இவற்றினை ஒழுங்குப்படுத்திட தகவல் தொழில்நுடப் சட்டத்தின் கீழ் இதற்காக வழி வகை செய்ய மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.இதன்படி வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் போட்டோ , வீடியோ உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment