வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல்,2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன்பெற்றவர்களுக்கு,வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால்,வட்டிதள்ளுபடி அளிக்கவங்கிகள் மறுப்பதாகஏராளமானபுகார்கள் வந்தன. இந்நிலையில்,இந்திய வங்கிகள் சங்கம்,
நேற்று(28-08-15) வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு,அரசு அறிவித்துள்ளவட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனேஅளிக்க வேண்டும்.
வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை, வங்கியின்இணையதளங்களில்வெளியிட வேண்டும்.இணையதளத்தில் விவரங்கள்வெளியிட்டுள்ளதுகுறித்தும் அறிவிக்க வேண்டும் என, மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.இதையேற்று, அனைத்துவங்கிகளும், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம்தேதி வரை,வங்கிக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி தள்ளுபடிஅளிக்க வேண்டும். வட்டிதள்ளுபடிபெற மாணவர்களுக்குஇதுவே கடைசிவாய்ப்பு. மாணவர்களேவங்கிகளை அணுகி,வட்டி தள்ளுபடியைப்பெறலாம். இவ்வாறு, வங்கிகள் சங்கம்கூறியுள்ளது.
இதுகுறித்து, கல்விக்கடன் ஆலோசனைக்குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன்கூறியதாவது: வட்டி தள்ளுபடிபெற, வங்கியில்மனு கொடுக்கவேண்டும். வட்டிதள்ளுபடிதரமறுக்கும் வங்கிகள்மீது சம்பந்தப்பட்டவங்கியின் தலைவரிடம்புகார் செய்யலாம். புகாரின்பிரதியை, இந்திய வங்கிகள்சங்கத்துக்கும் அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment