பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையாளர் ஜோப்பிரின்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
உதவித்தொகை சம்பந்தமான தகவல்களையும், விண்ணப்பத்தையும், http://tirunelveli.nic.in./ pdf/cg/.scholar.pdf என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment