Sunday, 6 September 2015

ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: பகுதிநேர கலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படும் - அமைச்சர் வீரமணி தகவல்

பகுதிநேர கலை ஆசிரியர் களுக்கான தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்துக் குப் பதிலளித்து பேசும்போது கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்:



சென்னையில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம்ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு ஊதியம் ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிர மாகவும், ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
இதற்காக ஆண்டுக்கு ரூ.39.54 லட்சம் நிதிஒதுக்கப்படும்.தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் 2015-16-ம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 90 லட்சம் ஒதுக்கப்படும்.
பொம்மலாட்ட கலைஞர்களை...
தோற்பாவைக்கூத்து மற்றும் பொம்மலாட்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அக்கலைகளில் ஆர்வமுள்ளவர் களுக்குப் பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப் பூதியம், பயிற்சி பெறு வோருக்கு நிதியுதவி மற்றும் பொம்மைகள், தோல் பொம்மைகள் போன்ற கலைப்பொருட்கள் வாங்குவதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்படும்.கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த தகுதியுள்ள நூல்களைப் பதிப்பிக்க நூலாசிரியர்களுக்கு நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களை பதிப்பிக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் படிமக் காட்சிக் கூடத்தில் உள்ள மின்னொளி அமைப்புகளுக்கு மாற்றாக நவீன எல்இடி மின்னொளி அமைப்புகள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. படிமக்கூட காட்சிப் பெட்டிகளை நவீனப்படுத்தவும், வளர்கலைக் கூடத்தில் உள்ள காட்சிப் பெட்டிகளை நவீனப்படுத்தவும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அகழாய்வு
திருவள்ளூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூரில் இருக்கும் ‘கொசஸ் தலையார்’ ஆற்றின் அருகே சுற்றியுள்ள பகுதியில் அகழாய்வுமேற்கொள்ள ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment