Wednesday, 1 July 2015

மலைக்கிராம பள்ளி செல்லாத ஆசிரியர்களுக்குநடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவு.

மலைக்கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, தேனிஉள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. 

அங்கு சரியான ரோடு வசதி இல்லாததால் பள்ளிகளுக்கு பல கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. சில பள்ளிகளுக்கு குதிரைகள் மூலமாகவும், பாதுகாவலரோடும் செல்ல வேண்டும்.இதனால் மலைக் கிராம பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை. அலைபேசி "சிக்னலும்' சரியாக கிடைக்காததால் ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம் உள்ளது. இதனால் சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு செல்வதில்லை. அந்த பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம் பாடம் நடத்தசொல்லி அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கின்றனர். 

இதனால்பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காட்டு வேலைகளுக்கு அனுப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மலைக்கிராம பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியாக பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment