வருமான வரி தாக்கல்செய்ய, புதுபடிவம் தயாராகிவருகிறது. பாஸ்போர்ட்உள்ளவர்கள், அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்கவேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம்தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும்.ஜூலை, 31ம்தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல்செய்ய வேண்டும். கடந்தநிதிஆண்டான, 2014 - 15 க்கான, விரிவானகணக்கை தாக்கல்செய்யும் காலம், ஆகஸ்ட்,
31ம்தேதி வரைநீடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறைமூத்த அதிகாரிஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டுஉள்ளது. தேவையற்றதகவல்கள்என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதியதகவல்கள்சிலசேர்க்கப்பட்டும், படிவம் தயார்செய்யப்பட்டது. ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு,கணக்கு கொடுப்பதுகடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதியபடிவத்தில்மாற்றங்கள்செய்து, மீண்டும்படிவம் தயார்செய்யப்படுகிறது.
படிவம் முழுமையாகத் தயார்செய்து வருவதற்கு, இன்னும் சிலநாட்கள் ஆகலாம். அதனால்,வருமானவரி கணக்கைதாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டுஉள்ளது.ஐந்துலட்சம் ரூபாய்க்குமேல் ஆண்டுவருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம்கணக்கைதாக்கல் செய்யவதுகட்டாயம். அதற்குகீழ் உள்ளவர்களே, படிவம் மூலம்தாக்கல்செய்யவேண்டும். எனவே, புதிய படிவம்உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல்செய்வதில்சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர்கூறினார்.
ஆகஸ்டு வரை காலநீட்டிப்பு
மத்திய அரசின் புதியகொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல்செய்யும்படிவங்களைஎளிமைப்படுத்தியும், புதிய தகவல்களைசேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதிய தகவல் சேர்ப்பின்கீழ், வருமானவரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்றவெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரிகணக்கு தாக்கல்படிவத்தில்தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறைதேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவுசெலவு செய்தோம்; எதற்கு செலவுசெய்தோம் என்றவிவரங்களை தெரிவிப்பதுகடினம்' என,பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட்எண்ணை மட்டும்குறிப்பிட்டால் போதும்' என, வருமானவரித்துறைதெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதைவினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment