1. RTI என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 என்பதன் சுருக்கமாகும்.
2. RTI போடுதல் என்பது, அச்சட்டத்தின் படி மனு செய்வதாகும்.
3. ஒரு அரசு அலுவலகத்தின் உண்மையான நடைமுறைகள் என்ன என்பதையும், முன்பு நீங்கள் செய்த கோரிக்கை மனு தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை அறியவும், ஒரு அரசு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் விவரங்களை நகல்களாகக் கோரவும் RTI போடலாம்
.
4. நீங்கள் RTI போடுவதால் அரசு ஊழியர்கள் உங்களை விவரம் தெரியாத மனிதர் என்று நினைத்து லஞ்சம் கேட்டல், சேவை தர தாமதப்படுத்துதல், கன்னாபின்னாவென இல்லாத நடைமுறைகளைச் சொல்லி அலைய விடுதல், தேவையற்ற ஆவணங்களைக் கேட்டல், சேவையை மறுத்தல், மரியாதையின்றி நடத்துதல் ஆகியவை நிகழாது.
5. ஒரு சேவைக்காக முதலில் முறைப்படி விண்ணப்பித்து விட வேண்டும். சேவை தாமதமானால், ஒரு மாதம் கழித்து RTI போடலாம். பிறகு லஞ்சம், முறைகேடு, தாமதம் இன்றி சேவை உங்களுக்குக் கிடைத்துவிடும்.
6. கோரிக்கை மனு, RTI ஆகிய அனைத்து வகைகளையுமே அக்னாலேட்ஜ்மென்ட் கார்டுடன் கூடிய பதிவஞ்சலாக அனுப்புவது சிறப்பாகும்.
7. RTI போட ஒரு சாதாரண வெள்ளைத்தாள், 10 ரூபாய்க்கு ஒரு நீதிமன்ற வில்லை போதுமானது.
8. “தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.2006 தேதியிட்ட அரசாணை எண் 114ன் படி எனக்கு ஒப்புதல் சீட்டையும், பதிலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிடக் கேட்டுக் கொள்கின்றேன்” என்னும் வாக்கியத்தை RTI மற்றும் அனைத்து வகை கோரிக்கை மனுக்களின் முடிவிலும் குறிப்பிட வேண்டும் ( மாநில அரசு அலுவலகங்களுக்கானது
No comments:
Post a Comment