பாடத்திட்டத்தில், பாலியல் கல்வியை கொண்டு வர வலியுறுத்தி, ஒரு லட்சம் கையெழுத்துகளை பெறும் முயற்சி, சென்னை பல்கலையில் துவங்கியது.
இந்திய பாலியல் அமைப்பு, சென்னை பல்கலையின் மானிவியல் மற்றும் பெண் கல்வி துறைகள் இணைந்து, உலக பாலியல் நல நாள் விழாவை கொண்டாடின. பாலியல் உரிமையும் மனித உரிமையே&' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது. பாலியல் கல்வியின் தேவை குறித்து விளக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வலியுறுத்தி, ஒரு லட்சம் கையெழுத்து பெறப்பட உள்ளது. சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், பாலியல் மருத்துவர் காமராஜ், அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வாசுகி, சென்னை பல்கலை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை பல்கலை துணைவேந்தர் ஆர். தாண்டவன் பேசியதாவது:
ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்கள் முன்னேறுவது கடினம். அவர்களின் சிந்தனைகளை இங்கு பெரும்பாலோர் ஏற்பதில்லை. குறிப்பாக, சிறுவயது திருமணம், தொடர் குழந்தை பேறு, மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு, பெண்களையே குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.
பாலியல் உரிமைகள் குறித்து, டாக்டர் காமராஜ் பேசியதாவது:
பாலியல் உரிமைகளை பொறுத்தவரையில், இருபாலருக்கும் சம உரிமை உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் இருந்தாலும், ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே சொத்துக்கள் உள்ளன.
உலகிலேயே, கருக்கொலை செய்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமூக, பொருளாதார, கலாசார ரீதியில் பெண்களுக்கான முக்கிகயத்துவம் குறைவு. தனி நபர் பாதுகாப்பு உரிமை, கவுரவ கொலைக்கு எதிரான, தன் விருப்ப உரிமை, பெண் குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான உரிமை, உடல் நலம் பேணும் உரிமை, கல்வி, தகவல் அறியும் உரிமை, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவை, பாலியல் சிறுபான்மையருக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்
No comments:
Post a Comment