சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.
முதல் கட்டமாக புதுச்சேரி, சண்டிகர் மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்த திட்டம் தொடங்கும் என டெல்லியில் நிதி அமைச்சக இணைச் செயலர் பியூஷ் குமார் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் விலையைக் கொடுத்து நுகர்வோர் வாங்க வேண்டியிருக்கும் என்ற அவர், அவர்களது மானியத் தொகையாக சுமார் 500 முதல் 700 ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு வரவு வைக்கும் என்றும் கூறினார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரேஷன் கார்டுகளை மின்னணுமயமாக்க மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பியூஷ் குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment