Wednesday, 1 July 2015

உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.

"அரசு அறிவித்துள்ள, 23 வகையான விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க,  மைதானமோ, போதிய உபகரணங்களோ இல்லை,' என, உடற்கல்வி ஆசிரியர்கள்புலம்புகின்றனர்.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தடகளம், கபடி, கால்பந்து, கோ-கோ, கைப்பந்து போன்ற விளையாட்டுகள், மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன. 

மைதான வசதி உள்ள பள்ளிகளில், ஹாக்கி, கூடைப்பந்து போன்றவை, கூடுதலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு டென்னிகாய்ட், செஸ், கேரம் போர்டு, பீச் வாலிபால், சைக்கிளிங், பென்சிங், ஜூடோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட, 23 வகையான விளையாட்டுகளை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, அரசு பள்ளி களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறுவது, கேள்விக் குறியாகி உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போட்டிகளுக்கு போதிய உபகரணங்கள் தேவை. ஓட்டப்போட்டி நடத்தவோ, அதற்கான தடங்களை வரையவோ, சரியான மைதானம் இல்லை. 30 சதவீத அரசு பள்ளிகளில், ஹாக்கி, கூடைப்பந்துக்கு என, பிரத்யேக மைதானம் கிடையாது. உள்ளரங்க போட்டிகளான செஸ், கேரம் மட்டுமே எளிதாக நடத்த முடி கிறது. ஜிம்னாஸ்டிக், ஜூடோ, குத்துச்சண்டை, சைக்கிளிங் போட்டி நடத்த, கூடுதல் வசதி தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, போதிய உபகரணங்கள் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment