Wednesday, 29 July 2015

கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் 27-ம் தேதி

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.


3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

கல்விகடன் திட்டத்திற்கு கலாம் பெயர்; டில்லி அரசு அறிவிப்பு

புதுடில்லி : பள்ளி கல்வியை முடித்து கல்லுாரியில் இணையும் மாணவ, மாணவியர்களுக்கு, ரூ 10 லட்சம் வரையிலான் கல்வி கடன்களை டில்லி அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் (2001- 2006) அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது எனவும், தொடக்க கல்வியில் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர் விகிதாசாரம் கணக்கில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கவும் முடிவானது. ஆசிரியர்

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில்பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுஆலோசித்து வருகிறது.
இந்த நிபந்தனை குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

மத்திய அரசின் கட்டாயஇலவச கல்விஉரிமை சட்டத்தின்படிஒன்று முதல்8ம்வகுப்புவரையில் இடைநிலைஆசிரியர் மற்றும்பட்ட தாரிஆசிரியர் பணியில்சேர வேண்டுமானால்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.
அதன்படி இலவச மற்றும்கட்டாய கல்விசட்ட விதிமுறைகளைதேசிய ஆசிரியர்கல்விக்குழுமம்(என்.சி.டி..)கொண்டுவந்தது.2009ல் அறிமுகப்படுத்தப்பட்டஇந்த சட்டம்,தமிழகத்தில், 2010-ல் அமல்படுத்தப்பட்டு, 2011-ல் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

அறிவியல் விழாவில் அரசு பள்ளிகள்!

இந்திய கலாசாரத் துறை சார்பில், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில், தேசிய அறிவியல் நாடக விழாவை,ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான விழா, ஜனவரி மாதம்கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, மண்டல வாரியாக, முதல் இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்படும். 
தென்மாநில பள்ளிகளை தேர்வு செய்ய, விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில், தென்னிந்திய அறிவியல் நாடக விழா,வரும் நவம்பரில் நடத்தப்படுகிறது.

பொது விடுமுறை - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு 30ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015


IMPORTANT DATES: 
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015 
Last date for Online Submission of application 19-08-2015 
Last date for payment of fees Through E-Challan or Debit/Credit Card by 
the candidate 20-08-2015 (before 03:30 PM) Period for On-line Corrections in Particulars (No correction will be allowed in any particulars after this date) 
21.08.2015 to 25.08.2015 Download Admit Card from CTET website 
04.09.2015 Schedule of Examination DATE OF 

EXAMINATION PAPER TIMING DURATION 

20.09.2015 PAPER - II 09.30 TO 12.00 HOURS 2.30 HOURS 

20.09.2015 PAPER - I 14.00 TO 16.30 HOURS 2.30 HOURS 

Tuesday, 28 July 2015

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள

கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள்

இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை

இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.
அனால் அரசு பள்ளிகள் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம்-ஓர் பார்வை

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள

உடலநலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் 

ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகிய பதவிகளுக்கு வரும், 29ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு, மாவட்டம்

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்

மதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிகழ்வு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய

காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அரசுப்பள்ளிகளுக்கு பரிசு

காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய அரசு பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறை மூலம் பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மாநில அளவில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்விழா கடந்த 15-ம் தேதி அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. இதில், ஒவ்வொரு
பள்ளியிலும் இவ்விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வைத்தல், தூய்மை பணிகளை

பள்ளி வாகனங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண் டும்

புகார் தெரிவிக்க வசதியாக பள்ளி வாகனங்களில் கட்டண மில்லா தொலைபேசி எண்களை குறிப்பிட வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பள்ளி பஸ்கள் இயக்கப்பட வேண்டும். பஸ்களின் உறுதி தன்மையை பள்ளி நிர்வாகம் தினமும் உறுதி செய்ய வேண்டும். வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் ஆய்வுக்கு பள்ளி பஸ்களை ஆண்டுக்கு ஒரு முறை உட்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டகக் கூடாது. மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை பஸ்களின் உட்புறம், வெளிபுறம் தெளிவாக குறிப்பிட்டிருக்க

சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை பல்கலை பட்டப்படிப்புக்கான உடனடித் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில்,'இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு, ஜூலையில் நடந்த உடனடித் தேர்வு முடிவுகள்,இன்று, results.unom.ac.in/, www.unom.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது

10 லட்சம் 'ஆடிட்டர்'கள் தேவையாம்படிப்பவர்களுக்கு அடிக்கிறது யோகம்!

''இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர்,'' என, ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் தேவாரெட்டி தெரிவித்தார்.சேலம், 'சார்ட்டட் அக்கவுன்ட்' பயிற்சி மையத்தில் படிப்பு முடித்தோருக்கு, சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
இதில், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய சார்ட்டட் அக்கவுன்ட் பயிற்சி மைய துணைத் தலைவர் தேவாரெட்டி, மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். பின், அவர், நிருபர்களிடம்

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.1.1.2004 முதல் மத்திய அரசு வேலையில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கட்டாயமானது.
கடந்த 1.4.2003 க்கு பிறகுமுதல் மாநிலமாக தமிழக அரசும் அறிமுகப்படுத்தியது. 2006 ஜூன் 1 முதல் அரசு ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.

SABL,SALM முறையை செயல்படுத்த ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதை முழுமையாக பின்பற்றாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை...

பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது.
இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதேபோல் 5 ம் வகுப்பில் எளிமை படைப்பாற்றலும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்விமுறையும் செயல்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து அதற்கு

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.
கல்வி உதவித் தொகை, இலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க, இந்த சான்றிதழ்கள் அவசியம். ஆனால், இந்த சான்றிதழ்களை, 'ஆன் - லைன்' மூலம் பெறுவதில் தாமதம்

ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100% தேர்ச்சியை அளிக்க முடியும்

ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப் பள்ளி

2014-ல் தேர்ச்சி பெற்றவர்கள்
பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திறந்தவெளிப் பள்ளியாக இது நடத்தப்படுகிறது.
எதுவும் படிக்காதவர்களும் பள்ளிப் படிப்பை இதில் படிக்கலாம். இந்தப் படிப்புமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு இணையானதாக முதல் கட்டம் உள்ளது. இது அடிப்படைக் கல்வி எனப்படுகிறது. அடுத்ததாக, 10- ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான வகுப்புகள் உள்ளன. இவற்றில் தொழில்முறைப் படிப்புகளும் உள்ளன.

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தவும், எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை பயன்படுத்த கூடாதென பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பயிற்சி

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்காக "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனத்துடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் செவ்வாய்க்கிழமை

வருமான வரி கணக்கு தாக்கல்: சரிபார்த்தல் படிவ நகலை அனுப்ப தேவையில்லை


வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்த பிறகு, அதன் சரிபார்த்தல் படிவ நகலை கையெழுத்திட்டு, வருமான வரித்துறைக்கு அனுப்புவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 2015–2016–ம் மதிப்பீட்டு ஆண்டில் இருந்து, அந்த நடைமுறை கைவிடப்படுவதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்கா நேற்று கூறினார்.

அதன்படி, மொத்த வருமானம் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் இருந்து, ‘ரீபண்ட்’ தொகை

நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024 நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி மற்றும் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக் கட்டளை நிதியின்கீழ் நூல்கள் வாங்கப்படுகின்றன. நூலகங்க ளுக்கு வாங்குவதற்கான நூல் களை தேர்வு செய்ய பொது நூலகத் துறை இயக்குநரை தலைவராகக் கொண்டு 16 பேர் அடங்கிய குழு

பள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு

ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள

அரசுப்பள்ளி-மாணவி மற்றும் ஆசிரியை….மெக்சிகோ பயணம்

அரசுப்பள்ளி-மாணவி மற்றும் ஆசிரியை….மெக்சிகோ பயணம்
அவர்களின் பயணம் நமது கையில்:
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 9 மாதங்களாக பரவலாக எல்லோராலும் பாராட்டப்பட்டு வருவதும்,அதற்கான காரணமும்…. நமது ஆசிரியர்கள் பெரும்பான்மையோருக்கு நன்கு தெரியும்.
தெரியாதவருக்கு…….
கடந்த வருடம் ஜூலை மாதம், நமது மாநில SSA(அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்ககம்) மூலம் PBL(Project Based Learning) என்ற பயிற்சி தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியப் பயிற்றுனர் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 40

கம்ப்யூட்டர் மூலம் பாடம் கற்பித்தல்: அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது!

கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியர் என்ற மத்திய, மாநில அரசுகளின் விருதை சிவகாசி அரசு பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் பெற்றுள்ளார்.


மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 'இன்பர்மேஷன்கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமி ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு, கடந்த 5 ஆண்டுளாக தமிழக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் சிறந்த கற்பித்தலை வழங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி

மழையை பொய்க்கச்செய்யும் சீமைகருவேலையை அழிக்க ஓர் புது புரட்சி!!

Agam E Magazine - அகம் மின்னிதழ்உங்கள் கிராமத்தை நாங்கள் தத்தெடுத்து , சீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , பராமரித்து தருகின்றோம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.1. உங்கள் மின்னஞ்சல் மற்றும் பெயரினை 
7806919891 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.2. உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம்அனுப்பப்படும். அதை அச்சு (பிரிண்ட்) எடுத்துக்கொள்ளவும்.3. விண்ணப்ப பெறுநரில் " கிராம தலைவர் மற்றும் பொதுமக்கள் , கிராம முகவரியை நிரப்பவும்.4. கீழே

Tuesday, 21 July 2015

CPS திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை

பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு: 4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி நோட்டீஸ்

தொடக்கக்கல்வித்துறையி ல், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில், 385 யூனியன்களில் உள்ள வட்டார வளமையங்களில், தலா ஒரு யூனியனுக்கு, குறைந்தது, ஏழு வீதம், மொத்தமாக, 4,500க்கும் மேற்பட்ட குறுவள மையங்கள் உள்ளன. 

ஒவ்வொரு குறுவள மையமும், 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உள்ளடக்கி

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விதேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பி.ஏ., ஆங்கிலம், பொது நிர்வாகம், பி.லிட்., தமிழ், பி.எஸ்சி., கணிதம் ஆகியவற்றிற் கும், எம்.பி.ஏ-யில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ், சிஸ்டம் மேனேஜ்மென்ட், பைனான் ஷியல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், புரடெக்ஷன் அன்ட் ஆபரேஷன் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், கார்ப்பரேட்

புதிய வருமான வரி படிவம் இன்று முதல் விநியோகம்

வரி தாக்குதல் செய்வதற்கான 14 பக்கங்கள் கொண்ட வருமான வரி தாக்கல் படிவம் தற்போது 3 பக்கங்களாக எளிதாக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துபவர்கள் படிவத்தை எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் சென்னை வருமான வரி அலுவலகத்தில் ஐ.டி.ஆர்.1, 2, 2ஏ, 4எஸ் என நான்கு படிவங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மாத சம்பளம்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட முதன்மைக்

தமிழகத்தில் பள்ளிகள்: ஒரு புள்ளி விவரம்

* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன.
* இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
* தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு,  நடைமுறைப்படுத்தப்பட்டு

IGNOU- B.Ed. Prospectus for January 2016

தொடக்கக்கல்வி - இனிவரும் CRC பயிற்சி வகுப்புகளுக்கு தொடக்க/உயர்தொடக்க நிலை ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும், உதவித் தொடக்கக்கல்வி அலுவர்களுக்கும் இயக்குனர் உத்தரவு ›

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் கிறிஸ்துவர்,

சென்னையில் 1.70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

        நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
         இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது? எத்தனை பேருக்கு இல்லை? என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

நிதியாண்டு 2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
"சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர்
என தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம்

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை.

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
        தமிழகத்தில், சமீபகாலமாக ஆபாச படங்கள் பார்த்தல், மது அருந்துதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற பல்வேறு புகார்கள் மாணவர்களின் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பீதியை

எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியீடு

எஸ்.ஐ. (காவல் உதவி ஆய்வாளர்) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. www.tnusrbexams.net என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்

ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.

ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. 
பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து

Tuesday, 14 July 2015

பெருந்தலைவர் காமராசர் - ஓர் பார்வை II

தமிழக அரசியல் :-
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை

பொது மாறுதல் அரசாணையின் அடிப்படைத் தகவல்கள்

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2015:
அரசாணையின் சில அடிப்படைத் தகவல்கள்:
பொதுக் கலந்தாய்விற்கு முன்னரே நிர்வாக மாறுதலும், மனமொத்த மாறுதலும், ஆசிரியர் பணி நிரவலும் முடிக்கப்பட வேண்டும். (வடக்குப்பட்டி ராமசாமிக்கு காசு குடுத்தா ஆ....ஹா....)
மனமொத்த மாறுதலுக்கு SED/CEO/DEEO ஆணை வழங்கலாம்.
உபரி ஆசிரிய காலிப் பணியிடங்களை கலந்தாய்வில் காட்டக்கூடாது.

அகஇ - 2015/16 ஆம் ஆண்டிற்கான "பள்ளி பராமரிப்பு மானியம்" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை- GO.232 SE(5) Dt.10.7.15 & விதிமுறைகள்

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு

கல்வித்துறை பொது மாறுதல் அனைத்து வகை விண்ணப்பங்கள்

தமிழ்நாடு அரசு --பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்- வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் !!

CCE FORMATS- ALL IN ONE...

RMSA: SCHOOL IMPROVEMENT PLAN-DATA PLAN FORMAT

தொடக்கக்கல்வி - சார்நிலைபணி - உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீண்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக மீளவும் மாறுதல் கலந்தாய்வு -இயக்குனர் செயல்முறைகள்

பி.காம் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் 50 மேற்பார்வையாளர் பணி

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிரப்பப்பட 50 மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:.01/2015
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பணி: மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)

பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது

.மு.எண் 100723/சி2/1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர்ஏற்கனவே பெற்றபி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில்வேறுபாடங்களை (மூனறுஆண்டுகள்படிப்பாகபயின்றவருககுஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்புபோதுமானதாகும்.இது குறித்து மேலும்தகவல் பெற விரும்பினால்
உறுப்பினர் செயலர்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தகவல்பெற்றுக்கொள்ளலாம

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொது மாறுதல் விண்ணப்பம்

AEO AEEO GENERAL NORMS TRANSFER APPLICATION CLICK HERE

ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

            ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்

கல்வியியல் பல்கலை. பி.எட். தேர்வு முடிவு வெளியீடு, மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு ஜூலை 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்திய பிஎட் (பொது), பிஎட் (சிறப்பு கல்வி) தேர்வு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. தேர்வு முடிவுகளை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.in) தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை 30-ம் தேதிக்கு பிறகு கல்லூரிகள் மூலம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
அடுத்த ஆண்டு நவம்பருக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ.

உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

செக்குமாடாய் உழைக்காதீர்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள்

Sunday, 12 July 2015

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை

தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.
இந்த மையம் 13 தலைப்புகளில் மதுரையில் 20ம் தேதியும், கோவையில் 22ம் தேதியும்,

நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சென்னை பரிக்ஷன் அறக்கட்டளை சார்பில் எளிய பரிசோதனை முறையில் வாழ்வியல் அறிவியலை பள்ளிகளில் கற்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவி சுமித்ரா தலைமை வகித்தார். சேவுகன்அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர்சொக்கலிங்கம் வரவேற்றார். அறக்கட்டளை திட்ட இயக்குநர் ,அறிவியலார் அறிவரசன்மாணவர்களுக்கு எளிய

தொடக்கக் கல்வி - ஜுலை 15 கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட இயக்குனர் உத்தரவு

TAMILNADU EDUCATION UNIVERSITY B.ED RESULTS PUBLISHED

TAMILNADU EDUCATION UNIVERSITY B.ED RESULTS CLICK HERE

தொடக்கக்கல்வி - SABL பின்பற்ற வேண்டும் இயக்குநரின் செயல்முறைகள்

CRC (11.07.2015) - SABL MODULES

SSA-PERIODIC ASSESSMENT TOOL-TAMIL,ENGLISH&MATHS (CLASS-1 TO 8)

எளிய செயல் வழிக்கற்றல் (SABL) ஏணிப்படி சின்னங்களும், அதற்கான செயல்பாடு விளக்கங்களும்

PLUS TWO MATHS FIRST MITERM MODEL TEST

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அறை.

அரசுப் பள்ளிகளில், கணினி வழி கல்வியைப் போதிக்கும், ஸ்மார்ட் கிளாஸ்அறை அமைக்கும் பணியை, தமிழ்நாடு மின்னணுவியல் கழகமான, எல்காட் நிறுவனம் துவங்கி உள்ளது. கற்பித்தல் முறை புதுப்பிப்பு மாணவர் புரிந்துகொள்ளும் வகையில் போதிக்கும் முறையை மேற்கொள்ள, ஸ்மார்ட் கிளாஸ் அறை திட்டத்தை தமிழகஅரசு கொண்டு வந்துள்ளது. 
இந்த திட்டம், ஏற்கனவே துவக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப்

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA-இணை இயக்குநர் -RTI

TET Study Material

டி.என்.பி.எஸ்.சி., 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

நான்கு தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.உதவி வனப்பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்புதல், தமிழக தொழிற்துறை உதவி புவியியலாளர்கள் பணியிடத் தேர்வு, 
குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி மற்றும் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதார அதிகாரி

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துங்கள்' ஆசிரியர்களிடம் இயக்குனர் உருக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில், ஐந்தாம் இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டன. வட மாவட்ட அரசு பள்ளிகள், 24 சதவீதம், 31 சதவீதம் என்று மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்றன. இதன் காரணங்களை ஆராய, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு அரசு

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு - BRTE ' s CONVERSION AS B.T CASE:

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு  இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் (SPD).....
1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை
2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள், மீதமுள்ள 1/4

புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு 'அறிவியல் புத்தாக்க விருது' (இன்ஸ்பயர் அவார்டு) வழங்கப்படுகிறது.

இதற்காக பள்ளிகளில் அறிவியல் திறன் படைத்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் இணைய தளம் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது.இதில் தேர்வு செய்யப்பட்ட