Tuesday 18 August 2015

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், முதுநிலை பட்டப்படிப்பு பயில இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எட்., எம்.எல்., எம்.சி.ஏ., எம்.பில். ஆகிய பட்டப்படிப்புகளை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை பெற எந்த ஊதிய வரம்பும் இல்லை. ஆனால், மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் சாதாரண மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.120ம், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment