Thursday 20 August 2015

பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை கையாளும், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.     
                         கோவையில், 346 ஆசிரியர்கள் பங்ககேற்றனர். பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் தவிர்த்த பிற பாடங்களை கையாளும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக கற்பித்தல் முறை பயிற்சிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இதில், 14 ஆயிரத்து 538 ஆங்கில ஆசிரியர்கள், பங்கேற்றுள்ளனர். ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு புரியும் படி எளிமையாக கற்பித்தல் குறித்து கருத்தாளர்கள் நேற்று பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, இன்றும், நாளையும் பயிற்சிகள் நடக்கவுள்ளது. ஆங்கில பாடத்திற்கான பயிற்சிகளுக்கு மட்டும், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 3 கோடியே 67 லட்சத்து, 80 ஆயிரத்து, 800 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதே போல், அடுத்தடுத்த கட்டங்களாக கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறவுள்ளது; 14 ஆயிரத்து 530 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள கணித பயிற்சி வகுப்புகளுக்கு, 3 கோடியே 67 லட்சம் ரூபாயும், 12 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ள சமூக அறிவியல் பாடத்திற்கு, 2 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரத்து 600 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், நான்கு மையங்களில் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நடந்தது. இதில், 396 ஆசிரியர் கள் பங்கேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் தலைமைவகித்து பயிற்சிகளை துவக்கி வைத் தார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அலுவலர் முத்து மாணிக்கம் முன்னிலை வகித்தார்

No comments:

Post a Comment